விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தென்காசி சாலையில் அமைந்துள்ள பிஏசிஆர் அரசு மருத்துவமனையில், ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறிப்பாக இந்த மருத்துவமனையில் சாலை விபத்து மற்றும் அவசரகால சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு ,மேல் சிகிச்சைக்காக மதுரை மற்றும் திருநெல்வேலிக்கு பரிந்துரைக்கப் படுவது வழக்கம்.
இந்நிலையில் இந்த மருத்துவமனையில் ஜெனரேட்டர் இயங்கவில்லை என கூறப்படுகின்றது. 1 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் தடைபடும்போது உள்நோயாளிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மின்வாரியத்திற்கு தகவல் கொடுத்தால் மின்வாரிய ஊழியர்கள் அலட்சியமாக நடப்பதாக மருத்துவமனை ஊழியர்கள் கூறுகின்றனர்.
அரசு மருத்துவமனையில் மின்சாரம் தடைப்பட்டதால் நோயாளிகள் அவதி மின்சாரம் இல்லாத நேரத்தில் இயக்க வேண்டிய ஜெனரேட்டரை உரிய முறையில் பராமரித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென மருத்துவமனைக்கு வரக்கூடிய நோயாளிகள் கோரிக்கை வைத்துள்ளனர் .