தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏழ்மையில் தவித்த கராத்தே சிறுவன்... மாவட்ட ஆட்சியர் உதவி - karate

விருதுநகர்: மாநில அளவிலான கராத்தே போட்டிக்கு தேர்வாகி ஏழ்மையால் கலந்துகொள்ள முடியாமல் தவித்து சிறுவனுக்கு மாவட்ட ஆட்சியர் நிதியுதவி செய்தார்.

karathe
karathe

By

Published : Jul 21, 2021, 12:31 AM IST

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை சக்திவேல் முருகன்- முத்துரத்தினம் ஆகியோர்களுக்கு 6 குழந்தைகள் உள்ளனர். அதில் மூத்த மகன் ஹரிஹரபிரசாத், வயது 16. அருப்புக்கோட்டை அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கிறார். இவர் மாவட்ட அளவில் நடைபெற்ற கராத்தே போட்டிகளில் பல்வேறு பதக்கங்கள் பெற்றுள்ளார்.

தற்போது, திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ள தமிழ்நாடு அரசு கராத்தே சாம்பியன்-2021 போட்டியில் கலந்துகொள்ள உள்ளார். ஆனால் ஏழ்மை காரணமாக போட்டியில் கலந்து கொள்ள இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதை பத்திரிகைகள் மூலம் தெரிந்துகொண்ட விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி, வட்டாட்சியர் மூலம் அந்த சிறுவனின் நிலைமையின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்து அறிக்கை பெற்றார்.

அதனடிப்படையில் ஹரிஹர பிரசாத் கராத்தே போட்டியில் பங்குபெறுவதற்காக நுழைவு கட்டணம், தங்கும் இடம், உணவு மற்றும் பாதுகாப்பு கவசம் ஆகியவற்றுக்கு 15,000 ரூபாய்க்கான காசோலை மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கினார்.

மேலும், கராத்தே பயிற்சிக்கு நேரம் ஒதுக்கி பயிற்சி செய்துவிட்டு, மீதமுள்ள நேரங்களில் நேரத்தை வீணாக்காமல், திட்டமிட்டு படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் சிறுவனுக்கு அறிவுறுத்தினார்.

ABOUT THE AUTHOR

...view details