தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சசிகலாவை தலைமை ஏற்க அழைத்து போஸ்டர்! - today news

விருதுநகரில், அதிமுகவின் தலைமையை ஏற்று கட்சியை ஒருங்கிணைக்க சசிகலாவிற்கு அழைப்பு விடுத்து ஒட்டப்பட்ட போஸ்டரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

sasikala
சசிகலா

By

Published : May 11, 2021, 9:32 AM IST

விருதுநகர்: அதிமுகவின் தலைமை ஏற்று கட்சியை ஒருங்கிணைக்க வருமாறு சசிகலாவிற்கு அழைப்பு விடுத்து, விருதுநகர் மாவட்டம் அருகில் உள்ள செந்நெல்குடி கிராமத்தில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

அந்த போஸ்டரில், அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் தியாக தலைவி சசிகலா அவர்களே அதிமுகவின் தலைமை ஏற்க வருக, ராணுவக் கட்டுப்பாட்டோடு இருந்த கழகத்தின் இன்றைய நிலைமை பாருங்கள் தாயே. போர் புரிய போர்ப்படை இருப்பினும், போர்ப்படை தளபதி மவுனம் காப்பது ஏனோ, கழகத்தை காக்கும் காவல் தெய்வமே வாருங்கள். கழகம் மட்டுமல்லாது தமிழ்நாட்டு மக்கள் நலனுக்காகவும் போராடுவோம் தாயே. உங்கள் தலைமையை ஏற்க கடைக்கோடி தொண்டர்களோடு நாங்களும் காத்திருக்கிறோம் என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

இந்த போஸ்டர் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் உள்பட 250 பேர் மீது வழக்குப்பதிவு

ABOUT THE AUTHOR

...view details