தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதியவர்கள், மாற்றுதிறனாளிகளிடம் அஞ்சல் வாக்குச் சேகரிப்பு! - தபால் வாக்கு பதிவு

விருதுநகர்: முதியோர், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மொத்தம் 1,439 அஞ்சல் வாக்குகள் பெறப்பட்டுள்ளது.

postal
postal

By

Published : Mar 31, 2021, 9:00 PM IST

தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டப்பேரவைத் தொகுதியில் நூறு விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு அஞ்சல் வாக்கு அளிக்க தேர்தல் ஆணையம் முயற்சிகள் மேற்கொண்டுவருகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி ஆகிய ஏழு சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து அஞ்சல் வாக்களிக்க 2,130 பேரிடம் மனு பெறப்பட்டது.

இதில் இன்று (மார்ச் 31) 1,439 அஞ்சல் வாக்குகள் பெறப்பட்டு உரிய சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இவை அனைத்தும் முறையாக காணொலி பதிவுசெய்யப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details