விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் முருகன் காலனியைச் சேர்ந்தவர் குழந்தைவேல் (30). இவர் கடந்த 30.8.2015 அன்று, அவரது பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுமிகளை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதையறிந்த சிறுமிகளின் பெற்றோர் சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குழந்தைவேலை கைது செய்தனர்.
பாலியல் வன்புணர்வு வழக்கு - இளைஞருக்கு சாகும் வரை சிறைத்தண்டனை விதித்த போக்சோ நீதிமன்றம்! - youngster should at jail till death by srivilliputhur posco special cout
விருதுநகர்: பாலியல் வன்புணர்வு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இளைஞருக்கு சாகும் வரை சிறைத்தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
போக்சோ
இதையடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. நேற்று நடைபெற்ற இறுதி விசாரணை முடிவில் குழந்தைவேலு, இயற்கை மரணம் அடையும் வரை சிறை தண்டனை, 1 லட்சத்தி 70 ஆயிரம் ரூபாய் அபராதம் ஆகியவற்றை விதித்து நீதிபதி பரிமளா தீர்ப்பளித்தார்.
இதையும் படிங்க: திருவல்லிக்கேணியில் மின்கசிவால் வீட்டில் தீ விபத்து..!
TAGGED:
virudhunagar crime news