பொன்னமராவதியில் ஒரு குறிப்பிட்ட சமூகம் குறித்து இழிவாக பேசி வாட்ஸ் அப்பில் ஆடியோ வெளியான சம்பவத்தைக் கண்டித்தும், அந்த ஆடியோவில் பேசிய இருவரை கைது செய்யக் கோரியும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆத்திப்பட்டி அருகே உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்டோர் இதே கோரிக்கையை முன்வைத்து அருப்புக்கோட்டை- திருச்சுழி நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.