தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின்வாரிய ஊழியரின் வாகனம் பறிமுதல்: காவல் நிலையத்தில் மின்சாரத்தை துண்டித்து பழிவாங்கிய ஊழியர்கள்! - மின்வாரிய ஊழியர்

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மின்வாரிய ஊழியரின் இருசக்கர வாகனத்தை காவலர்கள் பறிமுதல் செய்த ஆத்திரத்தில், அவர்கள் பணியாற்றும் காவல் நிலையத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி வருகிறார்.

மின்வாரிய ஊழியரின் வாகனத்தை பறிமுதல் செய்த காவல் துறை: காவல் நிலையத்திற்கு மின்சாரத்தை துண்டித்து பழி வாங்கிய ஊழியர்கள்!
Eb employees virudhunagar

By

Published : Aug 30, 2020, 5:34 PM IST

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாபட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரை நிறுத்தினார். அதில், வாகனம் ஓட்டி வந்த மின்வாரிய ஊழியர் சைமன் என்பவரிடம் விசாரணை நடத்தியதில், அவரிடம் உரிய ஆவணங்கள் ஏதும் இல்லை. இதனால், ஆய்வாளர் அந்த வாகனத்தை பறிமுதல் செய்தார்.

பின்னர், இது குறித்து மின்வாரிய ஊழியர் சைமன், உதவி மின் பொறியாளர் கோபாலசாமியிடம் தெரிவித்தார். இதையடுத்து, உதவி மின் பொறியாளரின் உத்தரவுக்கிணங்க கூமாபட்டி காவல் நிலையத்திற்கு மட்டும் வரும் மின்வயரை மின்வாரிய ஊழியர்கள் துண்டித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், இரண்டு மணி நேரம் காவல் நிலையம் இருளில் மூழ்கியது. பின்னர், காவல் நிலையத்திற்கு மின்சாரம் வழங்கப்பட்டது. இது குறித்து கூமாபட்டி உதவி காவல் ஆய்வாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். இந்நிலையில், மின்வாரிய ஊழியர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி வருகிறார்.

ABOUT THE AUTHOR

...view details