தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற 27 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், ஒன்றிய பெருந்தலைவர், துணைத் தலைவர் பதவியிடங்களுக்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற்றுவருகிறது.
அதனைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்டம் சாத்தூர், வெம்பக்கோட்டை, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ளாட்சி ஒன்றிய பெருந்தலைவர், ஒன்றிய துணை தலைவர்களுக்கு மறைமுக தேர்தலும், மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைth தலைவர் தேர்வும் நடைபெற்று வருகிறது.