விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அடுத்துள்ள சுந்தரராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காசிபாண்டியன் (44). இவர், கள்ளச்சாராயம் விற்பனைக்காக மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் இரண்டு பேரல்களில் சாராய ஊறல் வைத்திருப்பதாகக் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து உதவி ஆய்வாளர் மகாலிங்கம் தலைமையிலான காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.