தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விபத்தில் சிக்கிய குடும்பத்தைக் காப்பாற்றிய எஸ்பி! - பொதுமக்கள் பாராட்டு - Virudhunagar மாவட்ட செய்திகள்

விருதுநகர்: வாகன விபத்தில் சிக்கிய குடும்பத்தைக் காப்பாற்றி அரசு மருத்துவமனைக்கு உரிய நேரத்தில் அனுமதித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

விருதுநகர்
விருதுநகர்

By

Published : Jun 25, 2020, 7:58 PM IST

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியைச் சேர்ந்தவர் வீரவேல். இவருடைய மனைவி அன்னலட்சுமி. இந்தத் தம்பதிக்கு விஜய பாபு, விஜி என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இன்று காலை வீரவேல், குல்லூர் சந்தையில் உள்ள தனது உறவினர் வீட்டின் துக்க நிகழ்வுக்குச் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் தனது வீட்டிற்கு வரும் வழியில், ஊரணி அருகே வாகனம் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது. இதில், இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேரும் காயமடைந்து சாலையில் விழுந்து கிடந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த விருதுநகர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பெருமாள் காயமடைந்த நான்கு பேரையும் தனது வண்டியில் ஏற்றிக்கொண்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். காயமடைந்த நான்கு பேருக்கும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது. உரிய நேரத்தில் விபத்தில் சிக்கிக்கொண்டவர்களைக் காப்பாற்றிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் செயலை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.

இதையும் படிங்க:காவல்துறை மக்களை பாதுகாக்க அன்றி உயிரை பறிக்க அல்ல - இயக்குநர் சேரன்

ABOUT THE AUTHOR

...view details