தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இலங்கை அகதிகளுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய காவல் துறை கண்காணிப்பாளர்! - விருதுநகர் மாவட்ட செய்திகள்

விருதுநகர்: இலங்கை அகதிகள் முகாமில் வாழக்கூடிய 220 குடும்பங்களைச் சேர்ந்த மக்களுக்கு காய்கறி, அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பெருமாள் வழங்கினார்.

police
police

By

Published : Apr 10, 2020, 2:36 PM IST

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள மொட்டமலையில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்தப் பகுதியில் உள்ள 200 குடும்பங்களில் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் வசித்துவருகின்றனர். இதேபோன்று, 60 நாடோடி சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்தினரும் வசிக்கின்றனர்.

ஊரடங்கு உத்தரவு உள்ள நிலையில், இவர்களுக்கு மொட்டமலை அருகே செயல்படக்கூடிய சூரன் நர்சிங் கல்லூரி சேர்மன் குவைத்ராஜா இரண்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள அரிசி, சீனி, நாட்டுச் சர்க்கரை பருப்பு, காய்கறிகள், பால், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்க ஏற்பாடு செய்திருந்தார்.

நிவாரண பொருட்களை வழங்கிய காவல்துறையினர்

இந்நிலையில், 11ஆம் சிறப்பு அணி காவலர்கள் உதவியுடன் 11ஆம் அணி காவல் கண்காணிப்பாளர் ஜனகன், விருதுநகர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பெருமாள் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர்.

இதையும் படிங்க:இளைஞர்கள் வீட்டில் இருக்கவும் - அமைச்சர் கே.பி. அன்பழகன்

ABOUT THE AUTHOR

...view details