விருதுநகர்:Job racket complaint against Rajendra Balaji: ஆவின் உள்ளிட்டப் பல்வேறு அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக மூன்று கோடி ரூபாய் மோசடி செய்த புகாரில் கடந்த 17ஆம் தேதி முதல் தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை எட்டு தனிப்படைகள் அமைத்து மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் வேலை வாங்கித் தருவதாக முன்னாள் வெம்பக்கோட்டை அதிமுக மேற்கு ஒன்றியச் செயலாளர் விஜய நல்லதம்பி மூலம் ராஜேந்திரபாலாஜி, ஏழு பேரிடம் 78 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரிடம் பாதிக்கப்பட்ட ஏழு பேர் நேரில் மற்றும் இணையம் மூலமாகப் புகார் அளித்தனர்.