தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலை விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு நிதியுதவி! - விருதுநகரில் சாலை விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு ரூ.2.50 லட்சம் நிதியுதவி

விருதுநகர்: நத்தம்பட்டி அருகே சாலை விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு சக காவலர்கள் சேர்ந்து 2 லட்சத்து 50ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளித்தனர்.

காவலரின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
காவலரின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

By

Published : Mar 7, 2020, 4:45 PM IST

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள எம்.சுக்குலாபுரத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் பாண்டி (32). விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நத்தம்பட்டி காவல் நிலையத்தில் பணியாற்றிவந்தார்.

கடந்த ஜனவரி 10ஆம் தேதி விடுப்பிலிருந்த காவலர் கார்த்திக் பாண்டி அவரது நண்பர் ஜெயப்பாண்டியுடன் (34) ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மதுரை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றபோது எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி இருவரும் விபத்துக்குள்ளாகினர்.

இந்த விபத்தில் காவலர் கார்த்திக்பாண்டி, எதிரே வந்த கல்லூரி மாணவர்கள் ஞானராஜ் ஜெயந்த் (21), கேசவன் (19) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

காவலரின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

உயிரிழந்த காவலர் கார்த்திக் பாண்டியனுடன் 2008ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்கள் ஒன்று சேர்ந்து 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி திரட்டினர். இந்த நிதியை உயிரிழந்த காவலர் கார்திக் பாண்டியின் மனைவி ருத்ரா மற்றும் அவரது குடும்பத்தினரிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.பெருமாள் வழங்கி ஆறுதல் கூறினார்.

இதையும் படிங்க: காவலர் குடும்பத்திற்கு புதுச்சேரி அரசு நிதியுதவி

ABOUT THE AUTHOR

...view details