விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் பாதயாத்திரைச் செல்வது வழக்கம். அவ்வாறு பாதயாத்திரை சென்றவர்கள் மீது அவ்வழியாக வந்த விருதுநகர் ஆயுதப்படையைச் சேர்ந்த காவலருடைய இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மோதியது.
இந்த விபத்தில் பாதயாத்திரைச் சென்ற கற்பகலட்சுமி (28) என்ற பெண் உயிரிழந்தார். மேலும் இருவர் அதே விபத்தில் காயமடைந்து சாத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.