விருதுநகர்: இளம்பெண் கூட்டுப்பாலியல் வழக்கில் கைதான ஜுனைத் அகமது, மாடசாமி, பிரவீன், ஹரிஹரன் மற்றும் 4 சிறுவர்கள் உள்பட 8 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி அவர்களை ஒரு வாரகாலம் காவலில் எடுத்து விசாரணை நடத்தி முடித்த நிலையில் 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
4 பேர் மீது குண்டாஸ்:மேலும் சிறுவர்கள் நான்கு பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ள நிலையில் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜுனைத் அஹம்மது, மாடசாமி, பிரவீன் மற்றும் ஹரிஹரன் ஆகிய நான்கு பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
இதேபோன்று சாத்தூர் அருகேவுள்ள கிராமத்தைச் சேர்ந்த பொன்பாண்டி என்ற பாக்யராஜ்(39). 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வெம்பக்கோட்டை காவல் துறையினர் பாக்யராஜை போக்சோவில் கைது செய்தனர்.
10 மாதங்களில் 11 பேர் மீது குண்டாஸ் விருதுநகர் எஸ்.பி. மனோகரன் உத்தரவின்படி பாக்யராஜ் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகப் பத்து மாதங்களில் 11 நபர்கள் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:குஜராத்தில் 22 ஆண்டுகளாக அடைத்து வைக்கப்பட்ட பெண்