விருதுநகர் அருகே உள்ள சந்திரகிரிபுரத்தில் கட்டடத் தொழில் செய்துவருபவர் தங்கபாண்டியன். 35 வருடத்திற்கும் மேலாக இந்தத் தொழிலில் ஈடுபட்டுவரும் இவர், தனது தாய் முத்துலட்சுமி, மனைவி சுகந்தி, மூன்று பெண், ஒரு ஆண் குழந்தைகளுடன் வசித்துவருகிறார். இவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் இப்பகுதியில் சொந்தமாக வீடு வாங்கி அங்கு குடி பெயர்ந்துள்ளார்.
இந்த நிலையில், தங்களது வீட்டையும், நிலத்தையும் அபகரிக்கும் நோக்கத்தில் அந்த கிராமத்தைச் சேர்ந்த சிலர் முயற்சி மேற்கொண்டுவருவதாகவும், இதற்கு அடிபணியாததால் தங்களின் குடும்பத்தை சித்ரவதை செய்வதாகவும் தங்கப்பாண்டி உருக்கமாக தெரிவித்துள்ளார்.