தமிழ்நாடு அரசு ஜனவரி 1ஆம் தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தத் தடை விதித்தது. இவற்றை நடைமுறைபடுத்த தமிழ்நாடு முழுவதும் நகராட்சி, மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
தனியார் கிடங்கில் 4 டன் பிளாஸ்டிக் பதுக்கல்; உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்! - banned plastic
விருதுநகர்: தனியாருக்கு சொந்தமான கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நான்கு டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கிடங்கின் உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து விருதுநகர் நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி, சுகாதார ஆய்வாளர் குருசாமி ஆகியோர் விருதுநகரில் பல்வேறு கடைகளில் இன்று சோதனை நடத்தினர். அப்போது மெயின் பஜாரில் உள்ள தனியார் கிடங்கில் அரசால் தடை செய்யப்பட்ட நான்கு டன் அளவிலான பாலித்தீன் பைகள், உணவு பார்சல் செய்ய பயன்படுத்தப்படும் அலுமினிய பாக்ஸ், டீ கப்புகள் போன்றவற்றை நகராட்சி ஊழியர்கள் பறிமுதல் செய்தனர். இவற்றை பதுக்கி வைத்திருந்த கிடங்கின் உரிமையாளர் சிவசங்கர பாபுவுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.