விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயில் உள்ளது. இங்கு மகா சிவராத்திரியை முன்னிட்டு நாளை முதல் வரும் 24ஆம் தேதி வரை நான்கு நாள்களுக்குப் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி! - சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயிலுக்குச் செல்ல பக்தர்கள் அனுமதி
விருதுநகர்: மகா சிவராத்திரியை முன்னிட்டு நாளை முதல் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயிலுக்குச் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

சுந்தரமகாலிங்கம் கோயிலில் குவிந்த பக்தர்கள்
பிரதோஷம், சிவராத்திரியை முன்னிட்டு சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்டவற்றைக் கொண்டு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெறவுள்ளன. வரும் 23ஆம் தேதி மாசி அமாவாசை என்பதால் நாளையும் அமாவாசை தினத்திலும் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கோயில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
சுந்தரமகாலிங்கம் கோயிலில் குவிந்த பக்தர்கள்
இதையும் படிங்க: மகாசிவராத்திரி: உலகம் முழுவதுமிருந்து சிவன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்