விருதுநகர் மாவட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகளிலிருந்து பாசனத்திற்காக ஆட்சியர் ரா.கண்ணன் தலைமையில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு வத்திராயிருப்பு வட்டத்தில் பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகளிலிருந்து பாசனத்திற்காக மலர் தூவி திறந்து வைத்தார்.
இதில் ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் , விருதுநகர் மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று வத்திராயிருப்பு வட்டத்திலுள்ள பிளவக்கல் பெரியார், கோவிலாறு அணைகளிலிருந்து பாசனத்திற்குகாக
தண்ணீர் திறந்துவிட தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.
அதனடிப்படையில் விருதுநகர் மாவட்டத்திலுள்ள பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகளிலிருந்து பாசனத்திற்கு இன்று அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பிளவக்கல் பெரியார்,கோவிலாறு அணைகள் முறையே 13.90 சதுர மைல், 9.57சதுர மைல் நீர்ப்பிடிப்பு பகுதி கொண்டவை. 192.00 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பெரியாறு அணையில் 16650 மில்லியன் கன அடி நீரும், 133 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கோவிலார் அணையில் 66.39 மில்லியன் கன அடி நீரும் இருப்பில் உள்ளது.