தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி - பிளவக்கல் பெரியாறு அணை

விருதுநகர்: தொடர் மழையின் காரணமாக பிளவக்கல் பெரியாறு அணைக்கு நீர்வரத்து நான்கு அடி அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Pilavakkal Periyar Dam

By

Published : Nov 8, 2019, 7:31 AM IST

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக ஒரே இரவில் பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் நான்கு அடி உயர்ந்துள்ளது.

47 அடி நீர்மட்ட அளவு கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 39 அடியை எட்டியுள்ளது. தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கியுள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

பிளவக்கல் பெரியாறு அணை

ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக பிளவக்கல் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நேற்று முன்தினம் ஒரே இரவில் அணையின் நீர்மட்டம் நான்கு அடி உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிக்க: 'உழவுக்கு உதவும் டி.வி.எஸ்.50' - ஆந்திர விவசாயியின் அசத்தல் ஐடியா!

ABOUT THE AUTHOR

...view details