தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெட்ரோல் பங்கில் தீக்குளித்த முன்னாள் பங்க் ஊழியர்: போலீஸ் விசாரணை - தீ விபத்து

விருதுநகர்: சிவகாசியில் பெட்ரோல் விற்பனை நிலையத்தின் முன், ஊழியர் தீக்குளித்த சம்பவம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெட்ரோல் பங்கில் தீ குளித்த முன்னாள் பங்க் ஊழியர்
பெட்ரோல் பங்கில் தீ குளித்த முன்னாள் பங்க் ஊழியர்

By

Published : Apr 17, 2021, 10:24 AM IST

விருதுநகர் மாவட்டம், சிவகாசியிலிருந்து திருத்தங்கல் செல்லும் சாலையில் சுதர்சன் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையம் அமைந்துள்ளது. இந்த பெட்ரோல் விற்பனை நிலையத்தில் திருத்தங்கல்லைச் சேர்ந்த கண்ணன் (34) என்பவர் ஊழியராகப் பணி புரிந்து வந்தார்.

கண்ணன் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வேலையிலிருந்து நின்று விட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கண்ணன் முன்பு தான் வேலைபார்த்த பெட்ரோல் விற்பனை நிலையத்திற்குச் சென்று ஒரு பாட்டிலில் பெட்ரோல் வாங்கி பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பின்பக்கமாக உள்ள கழிப்பறைக்குச் சென்று தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

அவரது அலறல் சத்தம் கேட்ட அங்கு பணிபுரிந்த பெண் தொழிலாளர்கள் உள்பட பத்துக்கும் மேற்பட்டோர் இதனைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். இந்நிலையில், அங்கு பணியாற்றிய காசாளர் வினோத்குமார் கண்ணனைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட நிலையில், அவரது உடலிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் படுகாயமடைந்த கண்ணன், காசாளர் வினோத்குமார் ஆகிய இருவரையும் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், குடும்பப் பிரச்னை காரணமாக கண்ணன் தீ வைத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும், இது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:ராட்சத கிரேன் வாகனத்தில் திடீர் தீ விபத்து: ஒருவர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details