தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடனை செலுத்த இரண்டு மாத காலம் வேண்டும்: மாவட்ட ஆட்சியரிடம் மனு! - விருதுநகர் மாவட்ட செய்திகள்

விருதுநகர்: ஊரடங்கில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த கட்டாயப்படுத்தும் நிதி நிறுவனங்களிடம், கூடுதலாக 2 மாத கால அவகாசம் பெற்று தர வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மகளிர் சுய உதவி குழுவினர் மனு அளித்துள்ளனர்.

Petition to the ruler for a period of two months to pay off the debt
Petition to the ruler for a period of two months to pay off the debt

By

Published : Jun 8, 2020, 11:52 PM IST

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு 60 நாள்களை கடந்துள்ள நிலையில் பல்வேறு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வேலைக்கு செல்ல அரசு சில தளர்வுகளை அளித்திருந்தாலும், ஏராளமானோர் வேலையின்றி தவித்துவருகின்றனர்.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி, திருத்தங்கல் போன்ற பல்வேறு பகுதிகளிலுள்ள மகளிர் சுய உதவிக் குழுவினர் வாங்கிய கடன் தொகையை திருப்பி தர வேண்டும் என தனியார் நிதி நிறுவனங்கள் மன உளைச்சல் ஏற்படும் வகையில் நடந்துகொண்டு வருவதாகவும், மேலும் கடனை திருப்பி செலுத்துமாறு தங்களை நெருக்கடிக்குள்ளாக்கி வருவதாகவும் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதையடுத்து, வாங்கிய கடனை திருப்பி செலுத்த கூடுதலாக இரண்டு மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கண்ணனிடம் மகளிர் சுய உதவி குழுவினர் கோரிக்கை மனுவினை அளித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details