தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இறந்த மகனின் உடலை மீட்டுத்தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு - விருதுநகர் மாவட்ட ஆட்சியர்

விருதுநகர்: ஸ்வீடன் நாட்டில் கரோனாவால் பாதிகப்பட்டு உயிரிழந்த மகனின் உடலை மீட்டுத்தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் தந்தை மனு அளித்துள்ளார்.

ஆட்சியரிடம் மனு கொடுத்த தங்கராஜ்
ஆட்சியரிடம் மனு கொடுத்த தங்கராஜ்

By

Published : Mar 23, 2020, 10:18 PM IST

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கோட்டைப்பட்டியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவர், வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி ஒய்வு பெற்றவர். இவருடைய மகன் ராஜேஷ்குமார் ஸ்வீடன் நாட்டில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

அவருடன் மனைவி ஷோபானா, 8 வயது மகன் தேஜேஸ் கிருஷ்ணன் ஆகியோரும் ஸ்வீடனில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் உலகம் முழுவதிலும் பரவியுள்ள கரோனா வைரஸ் ஸ்வீடன் நாட்டில் பணிபுரிந்த ராஜேஷ்குமார், அவருடைய மனைவி மகன் ஆகிய மூன்று பேரையும் தாக்கியுள்ளது. இதில் சிகிச்சை பெற்று வந்த ராஜேஷ்குமார் உயிரிழந்தார்.

ஸ்வீடன் நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த தன்னுடைய மகனின் உடலையும், தன்னுடைய 8 வயது பேரன், மருமகள் ஆகியோரை மீட்டு இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தங்கராஜ், மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு அளித்துள்ளார்.

ஆட்சியரிடம் மனு கொடுத்த தங்கராஜ்

பின்னர், மனுவை பரிசீலித்த மாவட்ட ஆட்சியர் ஆர்.கண்ணன், உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக உறுதியளித்துள்ளார்.

இதையும் படிங்க: கொஞ்சம் தள்ளி நிக்கச் சொல்லும் கரோனா

ABOUT THE AUTHOR

...view details