தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மக்காச்சோள விவசாயிகள் நிவாரணம் கேட்டு ஆட்சியரிடம் மனு - Damage of maize crops due to the attack of plague

விருதுநகர்: சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்காச்சோள விவசாயிகள் நிவாரணம் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

மக்காச்சோள விவசாயிகள் நிவாரணம் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு
மக்காச்சோள விவசாயிகள் நிவாரணம் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

By

Published : Nov 28, 2019, 7:22 PM IST

விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்காச்சோள விவசாயிகள் நிவாரணம் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த விவசாயி ரங்கராஜன், 'கடந்த ஆண்டு படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிர்களுக்கான நிவாரணத் தொகை தற்போது வரை கிடைக்கப் பெறவில்லை, அதேபோல் கடந்த ஆண்டு பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் கொடுக்கப்பட வேண்டிய காப்பீட்டு நிவாரணமும் வழங்கப்படவில்லை' என்றார்.

மக்காச்சோள விவசாயிகள் நிவாரணம் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

மேலும், 'கடந்த ஆண்டைப் போலவே தற்போதும் படைப்புழு தாக்குதலால் மக்காச்சோள பயிர்கள் அதிக அளவில் பாதிப்படைந்துள்ளன, எனவே தங்களுக்கு வரவேண்டிய நிவாரண தொகையை விரைவில் வழங்க வேண்டும்' என்று அவர் கூறினார்.
இதையும் படிங்க: அரியலூரில் நெல் நடவு பணி தொடக்கம் - விவசாயிகள் மகிழ்ச்சி

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details