விருதுநகர்: சாத்தூர் அருகேயுள்ள சுப்பிரமணியாபுரம் பகுதியில் நேற்று (ஜூலை 2) மாலை வீசிய புயல் காற்றுக்கு 15க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால், அப்பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் மின் தடை ஏற்பட்டது.
இதனால், கிராம மக்கள் இரவு முழுவதும் மின்சாரமின்றி தவித்து வந்தனர். பின்னர், காலையில் ஒரு சில கிராமங்களில் மின்சாரம் சீர் செய்யப்பட்டாலும், பல மின்கம்பங்கள் சீரமைக்கப்படாமல் சாய்ந்தே கிடக்கின்றன.