தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் ஆர்ப்பாட்டம் - விருதுநகரில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் ஆர்ப்பாட்டம்

விருதுநகர்: ராஜபாளையம் அருகே பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் இயங்கி வரும் டாஸ்மாக்கை அகற்றக்கோரி பெண்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட பெண்கள்
டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட பெண்கள்

By

Published : Mar 17, 2020, 9:41 PM IST

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், பெண்கள் பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும், டாஸ்மாக் கடை வழியாக பொதுமக்கள் கோவிலுக்கும், விவசாய வேலைக்கும் செல்லவிருப்பதால் இந்தக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் எனக் கோரி அப்பகுதி பெண்கள், பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்டோர் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட பெண்கள்

டாஸ்மாக் கடையை அகற்றவில்லை என்றால் அடுத்தக் கட்டமாக ஊர் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: கொரோனா எதிரொலி: டாஸ்மாக் கடைகளில் அலைமோதும் கூட்டம்

ABOUT THE AUTHOR

...view details