தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மனித நேயத்தை மறக்கடித்த கரோனா! - People panic about Corona in Virudhunagar

விருதுநகர்: கரோனா வைரஸ் அச்சத்தால் ரயில் நிலையத்தில் மயங்கி விழுந்த நபருக்கு அரைமணி நேரமாக முதலுதவி செய்ய யாரும் முன்வரவில்லை.

ரயில் நிலையத்தில் மயங்கி விழுந்த நபர்
ரயில் நிலையத்தில் மயங்கி விழுந்த நபர்

By

Published : Mar 21, 2020, 12:01 AM IST

விருதுநகர் ரயில் நிலையத்தில் பழனி செல்வதற்காக வந்தவர் ஜோதி கார்த்திகேயன். இவர் பயணச்சீட்டைப் பெற்றுகொண்டு அங்கு ரயிலுக்காக காத்திருந்தார்.

அப்போது தீடீரென அவர் நெஞ்சில் கையை வைத்தபடி மயங்கிவிழுந்துள்ளார். அதனைக் கண்ட சக பயணிகளும், காவல் துறையினரும் கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தில் அவருக்கு முதலுதவி செய்ய யாரும் முன்வரவில்லை.

அரைமணி நேரமாக ஜோதி கார்த்திகேயன் உயிருக்குப் போராடியுள்ள நிலையில் ரயில்வே ஊழியர்கள் அவரை ஆட்டோ மூலமாக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

தமிழ்நாடு முழுவதும் கரோனாவை கட்டுபடுத்த பல்வேறு முயற்சிகள் ஏற்படுத்தினாலும் விருதுநகர் ரயில் நிலையத்தில் ஒரு மருத்துவக்குழு கூட இல்லாதது பயணிகளிடம் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

ரயில் நிலையத்தில் மயங்கி விழுந்த நபர்

உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த கரோனா வைரஸின் கொடூரத் தாண்டவம், ஆபத்து காலத்தில் சக மனிதனுக்கு உதவி செய்யும் மனித நேயத்தையே மறக்க வைத்துவிட்டாது என்று தான் கூறவேண்டும்.

இதையும் படிங்க: முதலமைச்சர் பழனிசாமிக்கு கரோனா கண்டறிதல் சோதனை

ABOUT THE AUTHOR

...view details