தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி - சதுரகிரி கோயில்

விருதுநகரில் நாளை பிரதோஷத்தை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல நான்கு நாள்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சதுரகிரி கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி
சதுரகிரி கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி

By

Published : Dec 15, 2021, 11:02 PM IST

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் புகழ்பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு நாளை (டிச.16) முதல் பிரதோஷம் மற்றும் பௌர்ணமி தினங்கள் உள்பட நான்கு நாள்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தக் கோயிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம் ஒருநாள் மற்றும் பவுர்ணமி, அமாவாசை உள்ளிட்ட 3 நாள்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.

கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக தொடர் மழையின் காரணமாகவும் கோயிலுக்குச் செல்லும் வழியிலுள்ள நீரோடைப் பகுதிகளில் நீர் வரத்து அதிகம் இருந்ததாலும் பக்தர்களின் பாதுகாப்புக் கருதி பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது மழை குறைந்துள்ளதாலும், நீரோடைகளில் நீர் வரத்து குறைவாக இருப்பதாலும் கார்த்திகை மாத பிரதோஷம் மற்றும் மார்கழி மாத பவுர்ணமியை முன்னிட்டு நாளை (டிச.16) முதல் 19ஆம் தேதி வரை பக்தர்கள் மலை ஏறி சென்று, சுவாமி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகத்தின் சார்பாகவும் வனத்துறை சார்பாகவும் மற்றும் கோயில் நிர்வாகத்தின் சார்பாகவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள சூழ்நிலையில் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ள நாள்களில் மழை பெய்தால் பக்தர்கள் மலை ஏறத் தடை விதிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இரவு நேரங்களில் கோயில் அமைந்துள்ள மலைப்பகுதியில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி கிடையாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தாலும் அனைவரும் தனிமனித இடைவெளியைப் பின்பற்றி முகக்கவசம் அணிந்து கோயிலுக்கு வர மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரதோஷம் மற்றும் பவுர்ணமி பூஜைக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.

இதையும் படிங்க:10 ஆண்டுகளுக்குப் பிறகு சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மீண்டும் தங்கத் தேரோட்டம்

ABOUT THE AUTHOR

...view details