தமிழ்நாடு முழுவதும் கரோனா தொற்று காரணமாக கடந்த மூன்று மாதங்களாகப் பொதுப் போக்குவரத்து முடங்கியதால், ரயில்கள் இயங்கப்படவில்லை. இதனால் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த பயணிகள் பயணச் சீட்டுகளை ரத்து செய்யவும், அவர்களது கட்டணத்தை திரும்பப் பெறவும் ரயில்வே துறை சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ராஜபாளையம் ரயில் நிலையத்தில் திருப்பி வழங்கப்பட்ட பயணிகளின் முன்பதிவு கட்டணம்! - Passenger prebooking train ticket fare returned
விருதுநகர்: ராஜபாளையம் ரயில் நிலையத்தில் முன்பதிவு பயணச் சீட்டுகளை ரத்து செய்து, அதற்கான கட்டணத்தை பயணிகள் திரும்பப்பெற்றுக் கொண்டனர்.

அந்த வகையில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ரயில் நிலையத்தில் இன்று (ஜூலை 30) முன்பதிவு சீட்டுகளை ரத்து செய்யவும், அதற்கான பணத்தைத் திரும்ப பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து முன்பதிவு செய்த பயணிகள் ரயில்வே நிலையத்தில் உள்ள முன்பதிவு மையத்தில் தங்களது பயணச்சீட்டுகளை ரத்து செய்து, அதற்குச் செலுத்திய கட்டணத்தையும் திரும்பப் பெற்றுக் கொண்டனர். பாதுகாப்புடன் முகக்கவசம் அணிந்து, தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்குமாறு ரயில்வே காவல் துறையினர் பயணிகளிடம் கேட்டுக்கொண்டனர்.