அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் அரசு நிர்ணயித்துள்ள குறைந்த கல்வி கட்டணத்தில் ஆங்கில வழி கல்வி கற்க, முதல் வகுப்பு பயில மாணவ-மாணவிகளுக்கு பள்ளி ஒன்றுக்கு 60 சீட்டுகள் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.
விண்ணப்பம் வழங்க மறுத்த பள்ளி நிர்வாகத்தை முற்றுகையிட்ட பெற்றோர்கள் - English medium
விருதுநகர்: அரசு உதவிபெறும் பள்ளியில் அரசு நிர்ணயித்த குறைத்த கட்டணத்தில் ஆங்கில வழிக்கல்வி பயில்வதற்கான விண்ணப்பம் வழங்க மறுத்த பள்ளி நிர்வாகத்தை கண்டித்து பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் விருதுநகரில் தனியார் நிறுவனத்திற்கு கீழ் செயல்படும் அரசு உதவிபெறும் பள்ளியில் குறைந்த கட்டணத்தில் ஆங்கில வழிக்கல்வி கற்பதற்கான விண்ணப்பத்தை வழங்காமல் பள்ளி நிர்வாகம் பெற்றோரை அலைக்கழித்ததால் ஆத்திரமடைந்த அவர்கள் பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்து பள்ளியை முற்றுகையிட்டனர். இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விரைந்து வந்தனர்.
அப்போது பள்ளி நிர்வாகம் விண்ணப்பப்படிவம் வழங்குவதாகக் கூறி கடந்த மூன்று நாட்களாக தங்களை அலைக்கழிப்பதாக பெற்றோர் குற்றச்சாட்டு வைத்தனர். இதையடுத்து பெற்றோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காவல் துறையினர் மாலை 5 மணிக்கு விண்ணப்பப்படிவம் வழங்கப்படும் என உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து பெற்றோர் பள்ளிவாசல் முன்பு நீண்ட நேரம் காத்திருந்தனர்.