தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊராட்சி மன்றத் தலைவரின் நெருக்கடியால் ஒருவர் தற்கொலை! - விருதுநகரில் ஊராட்சி மன்றத் தலைவர் நெருக்கடியால் ஒருவர் தற்கொலை

விருதுநகர்: திருச்சுழி அருகே ஊராட்சி மன்றத் தலைவரின் நெருக்கடியால் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி ஊழியர் கடிதம் எழுதி வைத்துவிட்டு, தற்கொலை செய்துகொண்டார்.

ஊராட்சி மன்றத் தலைவர் நெருக்கடியால் ஒருவர் தற்கொலை
ஊராட்சி மன்றத் தலைவர் நெருக்கடியால் ஒருவர் தற்கொலை

By

Published : May 13, 2020, 1:02 PM IST

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள முருகையாபுரத்தைச் சேர்ந்த சமையன் என்பவரின் மகன் வீரமுனியசாமி (48). இவர் முருகையாபுரத்தில் கடந்த 11 ஆண்டுகளாக மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி ஆப்ரேட்டராக (OHT) வேலை செய்துவருகிறார். இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக ஊதியம் வழங்கப்படவில்லை.

இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகத்திடமும், வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதன் காரணமாக வீரமுனியசாமி கடந்த சில நாள்களாக, விரக்தியடைந்து காணப்பட்டதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவினால், வீரமுனியசாமிக்கு பணம் நெருக்கடி அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 5 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததாலும் அவர் கடிதம் எழுதிவைத்துவிட்டு, தற்கொலை செய்துகொண்டார்.

அந்த கடிதத்தில் அவர் கூறியதாவது, 'முருகையாபுரம் OHT ஆப்ரேட்டராகப் பணிபுரிந்து வந்தேன். கடந்த 5 மாதங்களாக எனக்குச் சரியாக சம்பளம் தரவில்லை. இதற்கு காரணம் பனிக்குறிப்பு ஊராட்சிமன்றத் தலைவர், கல்லாம்பிரம்பு முருகன் தான். இவர் அவரது மகன்கள் திருப்பதி, சொக்கன், அழகர்சாமி, மகாலிங்கம் ஆகியோரின் சொல்லைக் கேட்டு, என்னை மிகவும் துன்புறுத்தி , கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

ஆகையால், நான் தற்கொலை செய்து கொள்கிறேன்' எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த கடிதத்தை எழுதிவைத்துவிட்டு, தனது வீட்டின் பின்புறம் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த திருச்சுழி காவல் துறையினர், கடிதத்தைக் கைப்பற்றி, அதில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:மருத்துவர் தற்கொலை: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. கைது

ABOUT THE AUTHOR

...view details