விருதுநகர் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றுப் பரவலின் வேகம் கடந்த சில தினங்களாக குறைந்து வருகிறது. மாவட்டத்தில் முன்னதாக 11 ஆயிரத்து 896 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் 56 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 952ஆக அதிகரித்துள்ளது.
விருதுநகரில் கரோனாவால் மேலும் நான்கு பேர் பலி! - தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை
விருதுநகர் : கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நான்கு பேர் இன்று (ஆக. 24) உயிரிழந்ததையடுத்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 174ஆக அதிகரித்துள்ளது.
other 4 person died due to corona in virudunagar
இதுவரை மாவட்டத்தில் 11 ஆயிரத்து 341 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 437 பேர் விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம் போன்ற பகுதியில் உள்ள சிறப்பு வார்டுகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இன்று தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில், மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை மாவட்டத்தில் 174 பேர் உயிரிழந்துள்ளனர்.