விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள திருவண்ணாமலையில் தென் திருப்பதி என அழைக்கப்படும் ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வழிபாட்டிற்காக பக்தர்கள் இங்கு வருவது வழக்கம். குறிப்பாக இங்கு புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் நடைபெறும் பிரம்மோற்சவ கருட சேவை உற்சவத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
இந்நிலையில், இந்த ஆண்டு கரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கடும் கட்டுப்பாடுகளுடன் வரும் 19ஆம் தேதி (புரட்டாசி முதல் சனிக்கிழமை) முதல் வாரம் கருடசேவை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க குழந்தைகள் மற்றும் 60 வயதை தாண்டிய முதியவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களின் வழிபாட்டு வசதிக்காக காலை 3.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை அரைமணி நேரத்திற்கு ஒரு முறை என 16 வகையான நேர கால அட்டவணைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.