விருதுநகர்:ஆத்துமேடு பகுதியில் வசித்துவரும் பால்பாண்டி (61) என்பவர், அசோகன் லாரி செட் என்ற பெயரில் லாரி சர்வீஸ் நடத்திவருகிறார். இந்நிலையில் இன்று விருதுநகர் ரயில்வே பீடர் சாலையில் வந்துகொண்டிருந்த பால்பாண்டியை, அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று வழிமறித்து, கையில் இருந்த அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியது.
தகவலறிந்து அங்கு சென்ற மேற்கு காவல் நிலைய காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.