தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாத்தூர் அருகே தனியார் பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு - Virudhunagar District News

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள தனியார் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில், அறை தரைமட்டமான நிலையில், கட்டட இடிபாடுகளில் சிக்கி தொழிலாளர் ஒருவர் உயிரிழந்தார்.

சாத்தூர் அருகே தனியார் பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
சாத்தூர் அருகே தனியார் பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

By

Published : May 4, 2022, 9:55 AM IST

Updated : May 4, 2022, 11:40 AM IST

விருதுநகர்: சாத்தூர் அருகே கத்தாளம்பட்டி கிராமத்தில் சிவகாமிபுரத்தை சேர்ந்த பெரியகருப்பன்(57) என்பவருக்கு சொந்தமான எஸ்.பி.டி. பட்டாசு தொழிற்சாலை இயங்கி வருகிறது. டிஆர்ஓ உரிமம் பெற்றுள்ள பட்டாசு தொழிற்சாலையின் 5 அறைகளில் 20 தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இங்கு சக்கரம் உள்ளிட்ட சிறியரக பட்டாசு வெடிகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று (மே 4) காலை வழக்கம் போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, குடும்பன்பட்டியைச் சேர்ந்த சோலை விக்னேஸ்வரன் ஒரு அறையில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது, உராய்வினால் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

வெடி விபத்தில் உயிரிழந்த சோலை விக்னேஸ்வரன்

இதில் அந்த அறை தரைமட்டமானது. இடிபாடுகளில் சிக்கிய சோலை விக்னேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து விரைந்து சென்ற சாத்தூர் தீயணைப்பு அலுவலர் கதிரேசன் தலைமையிலான பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் கட்டட இடிபாடுகளில் யாரெனும் சிக்கியுள்ளார்களா என்றும் தேடி வருகின்றனர். இதுகுறித்து சாத்தூர் டவுன் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: நெல்லையில் பட்டப்பகலில் பெண் எரித்து கொலை? போலீசார் விசாரணை

Last Updated : May 4, 2022, 11:40 AM IST

ABOUT THE AUTHOR

...view details