விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேவுள்ள மதுரை - கொல்லம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காரும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த அலி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் காரில் பயணம் செய்த இரண்டு பெண்கள் உள்பட நான்கு பேர் படுகாயமடைந்தனர். அவர்களை அருகிலிருந்தவர்கள் மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.