விருதுநகர் மாவட்டம் முத்துலாபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. 60க்கும் மேற்பட்ட அறைகளுடன் கூடிய இந்த பட்டாசு ஆலையில், சுமார் 200க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
விருதுநகரில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: தொழிலாளர் பலி - விருதுநகர் வெடி விபத்து
விருதுநகர்: முத்துலாபுரத்தில் இயங்கிவரும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி தொழிலாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த ஆலையை சிவகாசியைச் சேர்ந்த கமல் என்பவர் ஒப்பந்த அடிப்படையில் நடத்தி வருகிறார். இந்நிலையில், இன்று காலை தொழிலாளர்கள் ஐந்து பேர், பேன்சி ரக பட்டாசுகளை உலர வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பட்டாசுகளில் ஊராய்வு ஏற்பட்டு பெரும் சத்தத்துடன் வெடித்ததில் 5 அறைகள் முற்றிலும் இடிந்து விழுந்தன.
இந்த கோர விபத்தில் சிக்கி மத்தியசேனை பகுதியைச் சேர்ந்த மாயழகன் (45) என்பவர் உடல் சிதறி பலியானர். காயமடைந்த மற்றவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த ஆலைக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இது குறித்து ஆமத்தூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.