தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

17ஆம் நூற்றாண்டு வில் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு! - Virudhunagar latest news

விருதுநகர்: ஆமத்தூர் அருகே தவசிலிங்கபுரத்தில் 400 ஆண்டுகள் பழமையான வில் வீரனின் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

17ஆம் நூற்றாண்டு வில் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு
17ஆம் நூற்றாண்டு வில் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு

By

Published : May 18, 2021, 5:00 PM IST

இது குறித்து முனைவர் து.முனீஸ்வரன் கூறியதாவது, "சங்க கால தொடக்கத்திலிருந்து தமிழரின் பண்பாட்டில் நடுகல் வழிபாட்டு முறை ஒரு முக்கியப் பங்கு வகித்து வந்துள்ளது. குறிப்பாக மன்னர்களுக்கு இடையே ஏற்பட்ட போர், பூசல் காரணமாக இறந்த வீரர்களுக்கு நடுகல் நட்டு வழிபடும் முறை இருந்துள்ளது.

இந்நிலையில் தவசிலிங்கபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நடுகல், இரண்டரை அடி உயரமும் ஒன்றரை அடி அகலமும் உள்ளது. அதில் வீரன் தனது இடது கையில் வில்லை பிடித்தபடியும், வலது கையில் வில் அம்பு ஏந்தியவாறும் காட்சி தருகின்றான்.

வீரன் காலில் வீரக்கழலும் இடுப்பில் கச்சையுடனும் கூடிய குறுவாளுடனும் நீண்ட காதுகள், இடது புறம் சற்று சரிந்த கொண்டையுடனும் நின்றவாறு காட்சி தருகிறான். இச்சிற்பத்தின் மேல்பகுதி நாசிக்கூடு கொண்ட தோரணை வளைவுடன் புடைப்பு சிற்பமாக வில் வீரனின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது.

17ஆம் நூற்றாண்டு வில் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு

இச்சிற்பத்தை ஆய்வு செய்யும்போது, இப்பகுதியில் வில் வித்தையில் புகழ் பெற்று இறந்த போர் வீரனின் நினைவைப் பறைசாற்றுவதற்காக எழுப்பப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். இதன் காலம் கி.பி. 17ஆம் நூற்றாண்டு என இருக்கலாம். தற்போது மக்கள் மாலைக்கோயில் என்று வழிபட்டு வருகின்றனர்" என்றார்.

இதையும் படிங்க: உத்தரமேரூர் அருகே அரியவகை கல் செக்கு கண்டெடுப்பு

ABOUT THE AUTHOR

...view details