விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வீரார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவருடைய மனைவி அன்னலட்சுமி(80). இவர்களுக்கு இரண்டு மகன்களும் நான்கு மகள்களும் உள்ளனர். கனேசன் என்ற ஒரு மகன் மட்டும் வீரார்பட்டியில் வசித்து வருகிறார். அவருடன் பெற்றோர் இருவரும் வசித்து வருகின்றனர். மற்ற அனைவரும் திருமணமாகி வெளியூரில் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று மதியம் வெளியே சென்ற அன்னலட்சுமி வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அவரை அக்கம் பக்கத்தினர் தேடி வந்தனர். பின்னர், அன்னலட்சுமி அவரது வீட்டின் அருகே உள்ள கிணற்றில் விழுந்து உயிரிழந்ததாக தகவல் கிடைத்தது.