தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 4, 2019, 5:09 PM IST

Updated : Dec 4, 2019, 5:31 PM IST

ETV Bharat / state

சேமிக்கும் பழக்கத்தை மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கும் வகையில் பழங்கால நாணயங்கள் கண்காட்சி

விருதுநகர்: பழங்காலப் பொருட்களை சேமிக்கும் பழக்கத்தை மாணவ, மாணவியர்களுக்கு ஊக்கப்படுத்த, பழங்கால நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், ஸ்டாம்புகளின் கண்காட்சி ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்றது.

school students in exhibition
Coins and Antique exhibition

பழங்காலப் பொருட்களைப் பாதுகாக்க வேண்டும் மற்றும் அரியப் பொருட்களை சேமிக்க பள்ளி மாணவ, மாணவிகள் பழக வேண்டும் என்பதற்காக தனியார் பள்ளி சார்பில், நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், ரமேஷ் என்பவர் தனது சிறு வயதில் இருந்து சேகரித்து வைத்திருந்த பழைய நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், ஸ்டாம்புகள் ஆகியவற்றை பார்வைக்கு வைத்திருந்தார்.

இந்தக் கண்காட்சியில் பழங்காலங்களில் வணிகத்துக்காக பயன்படுத்தப்பட்ட நாணயங்கள் முதல் தற்போது உள்ள நாணயம் வரை, சுமார் 500க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்படும் டாலர், யூரோ மற்றும் உலோகத்தால் ஆன நாணயங்கள், வெளிநாட்டுத் தபால் தலைகள், அரசர்கள் பயன்படுத்திய பொருட்கள் உள்ளிட்டவைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

பழங்கால நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், ஸ்டாம்புகள் கண்காட்சி

இதனை நகரிலுள்ள பல்வேறு பள்ளிகளிலிருந்தும் ஏராளமான மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர்.

குறிப்பாக 1330 திருக்குறள்களை வைத்து திருவள்ளுவர் படம் வரையப்பட்டு, காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதற்காக ரமேஷ் என்பவருக்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பாராட்டுச் சான்றிதழை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கண்காட்சி அங்கு வந்து பார்வையிட்ட மாணவர்களை வெகுவாகக் கவர்ந்தது.

இதையும் படிங்க:

பேருந்து நிலையத்தில் புகைப்படக் கண்காட்சி!

Last Updated : Dec 4, 2019, 5:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details