தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விருதுநகரில் சத்துணவு ஊழியர்கள் மறியல் போராட்டம்: 350 பேர் கைது! - Nutrition workers road blockade protest in virudhunagar

விருதுநகர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு உடை அணிந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 350 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

சத்துணவு ஊழியர்கள் கைது  சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் போராட்டம்  விருதுநகரில் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் போராட்டம்  விருதுநகரில் சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் கைது  Nutrition staff arrested  Nutrition workers road blockade protest  Nutrition workers road blockade protest in virudhunagar  Nutrition workers protest in Virudhunagar
Nutrition workers road blockade protest

By

Published : Feb 23, 2021, 6:54 PM IST

தமிழ்நாடு முழுவதும் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் சிறப்பு காலமுறை ஊதியத்தை ரத்து செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். ஒட்டுமொத்த பணிக்கொடை தொகை பத்து லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்.

நிறுத்தி வைக்கப்பட்டுள்ள புதிய நியமன தேர்வை உடனே நடத்தி காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இன்று சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் சாலை மறியல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், 350-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 350 சத்துணவு ஊழியர்களையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிங்க:ஸ்கூல்ல சாப்பாடே போடல சார் பசிக்குது; வைரலாக பரவும் அரசுப் பள்ளி மாணவனின் வீடியோ

ABOUT THE AUTHOR

...view details