அத்திவரதர் சிலையை பூமிக்கடியில் மீண்டும் புதைக்க தேவையில்லை - ஜீயர் - athivaradhar
விருதுநகர்: அத்திவரதரை மீண்டும் பூமிக்கடியில் வைக்கக் கூடாது என ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் தெரிவித்துள்ளார்.
ஜீயர்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மனவாள மாமுனிகள் மடத்தின் சடகோபராமானுஜ ஜீயர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ' கடந்த காலங்களில் திருட்டு பயம் அதிகமாக இருந்ததால் அத்திவரதரை குளத்தில் வைத்தனர் . அனால் தற்போது அது தேவை இல்லை, மேலும் இது தொடர்பாக முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை கூற உள்ளோம். அத்திரவரதர் மேலே வந்ததால் தான் மழை பொழிவதாகவும், அதை மீண்டும் புதைக்க கூடாது என' தெரிவித்தார்.