கல்லூரி உதவி பேராசிரியை மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கு 2018ஆம் ஆண்டு முதல் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.
கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு நிர்மலா தேவி தனது தலைமுடியை வெட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்துக்கு வந்தபோதுநீதிமன்ற வளாகத்திலேயே தியானம் மேற்கொண்டார்.
நீதிமன்றத்தில் ஆஜரான நிர்மலா தேவி இதனைத்தொடர்ந்து வழக்கறிஞரின்சமாதானத்தின்பேரில் அருப்புக்கோட்டை சென்ற நிர்மலா தேவி, அங்குள்ள தர்காவில் தனது தியானத்தைத் தொடர்ந்தார். அவரது நடவடிக்கைகள் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
இதையடுத்து, திருநெல்வேலியில் உள்ள தனியார் மனநல மருத்துவமனையில் ஒரு வாரம் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், இன்று நீதிமன்றத்தில் ஆஜராக நிர்மலா தேவி வரும்போது வழக்கத்திற்கு மாறாக மொட்டையடித்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த மாவட்ட கூடுதல் நீதிபதி ஆகஸ்ட் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.