தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விருதுநகரில் கரோனாவுக்காக நிதி வழங்கிய புதுமண தம்பதி - newly wed couple give fund for Corona relief in virudhunagar

விருதுநகர்: புதிதாக திருமணமான தம்பதியினர் கரோனா நிவாரண நிதியாக 50,000 ரூபாய்க்கான காசோலையை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.

newly wed couple give fund for Corona
newly wed couple give fund for Corona

By

Published : May 24, 2020, 9:10 PM IST

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் தற்போது பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு குறைந்த அளவில் மட்டுமே மக்கள் கலந்துகொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், விருதுநகரில் கபில்ராஜ் - சப்தமி என்ற ஜோடிக்கு விருதுநகரிலுள்ள தனியார் மண்டபத்தில் இன்று திருமணம் நடைபெற்றது. இ்ந்தத் திருமணம் ஊரடங்கு உத்தரவை மீறாத வகையில் குறைவான நபர்களுடன் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, மணமக்கள் முகக் கவசம் அணிந்தவாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள முகாமில் ஆட்சியர் கண்ணனிடம் 50,000 ரூபாய்க்கான கசோலையை கரோனா நிவாரண நிதியாக வழங்கினர்.

இதையும் படிங்க... முகக்கவசங்கள் வழங்கி திருமணம் செய்த தஞ்சாவூர் தம்பதி!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details