தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 11, 2021, 6:29 AM IST

Updated : Aug 11, 2021, 6:34 AM IST

ETV Bharat / state

தங்க மகன் நீரஜுக்கு தங்கத்தில் சிலை - அசத்தும் தொழிலாளி

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவின் உருவம், 0.480 மில்லி கிராம் தங்கத்தில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

நீரஜ்
நீரஜ்

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தர்மாபுரம் தெருவைச் சேர்ந்தவர் சமுத்திரக்கனி. தங்க நகைகள் செய்யும் இவர், டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவின் செயலை போற்றும்விதமாக, அவர் ஈட்டி எறிவது போன்ற உருவத்தை 0.480 மில்லிகிராம் தங்கத்தில் செய்துள்ளார்.

இனி வரும் காலங்களில் உலக அளவிலான போட்டிகளிலும், ஒலிம்பிக் போட்டிகளிலும் தங்கம் வெல்லும் ஒவ்வொரு வீரரின் உருவத்தையும் இதேபோன்று வடிவமைக்க ஆவலுடன் காத்திருப்பதாகவும் சமுத்திரக்கனி கூறுகிறார்.

நீரஜ் உருவத்தை தங்கத்தில் செதுக்கிய நகை தொழிலாளி

இவர் இதற்கு முன்பாக 2007ஆம் ஆண்டு உலகக் கோப்பையை 0.44 மி.கிராமிலும், ஹெல்மெட்டை ஒரு கிராமிலும் 2010ஆம் ஆண்டு தேசியக்கொடியை 0.020 மி.கிராமிலும், 2014ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் மரத்தை 0.280 மி. கிராமிலும் செய்து பொதுமக்களின் பாராட்டைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:நாடே எங்களை வரவேற்றது போல் இருந்தது - கேப்டன் மன்பிரீத்

Last Updated : Aug 11, 2021, 6:34 AM IST

ABOUT THE AUTHOR

...view details