தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 6, 2019, 4:14 PM IST

ETV Bharat / state

வரும் 8ஆம் தேதி வரை சதுரகிரி செல்ல அனுமதி - பக்தர்கள் உற்சாகம்!

விருதுநகர்: மழையின் காரணமாக சதுரகிரி கோயிலுக்குச் செல்ல வனத்துறை தடை விதித்திருந்த நிலையில், நவராத்திரியை முன்னிட்டு இன்று முதல் பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல வனத்துறை சிறப்பு அனுமதி அளித்துள்ளது.

sathurakiri trip devottee

மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர்களில் அமைந்துள்ளது இந்த சதுரகிரி மலை. தூய்மையான அருவி நீரும், பசுமைபோர்த்திய வனங்களும், கவிதை பாடும் பறவைகளும் என பல மூலிகைப் பொருந்திய இடமுமாக இருக்கிறது. தமிழ் சித்தர்களின் முதல் குருவாகவும் ஆதிசித்தர்கள் வாழ்ந்த இடமாக சதுரகிரி கருதப்படுகிறது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்.

தரைமட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் உள்ள இந்தக் கோயிலுக்கு அமாவாசை, பெளர்ணமி நாட்களில் மட்டுமே பக்தர்கள் அதிகமாக வந்து செல்வார்கள். கடந்த சிலநாட்களாக இப்பகுதியில் தொடர் மழை பெய்து வந்ததால், சதுரகிரி மலைக்குச் செல்ல வனத்துறை தடை விதித்திருந்தது.

சதுரகிரி மலைக்குச் செல்லும் பக்தர்கள்

இந்நிலையில்,சதுரகிரி கோயிலுக்குச் செல்லும் ஓடைகளில் நீர் வரத்து குறைந்துள்ளதால் நவராத்திரியை ஒட்டி, இன்று முதல் அக்டோபர் 8ஆம் தேதி வரை பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல வனத்துறை சிறப்பு அனுமதி அளித்துள்ளது.

இதையும் படிங்க:

சதுரகிரி மலையில் வெள்ளப்பெருக்கு - மலையில் மாட்டிக்கொண்ட நூற்றுக்கணக்கான பக்தர்கள்!

ABOUT THE AUTHOR

...view details