விருதுநகரில் இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”குடியுரிமை சட்டம் விவகாரத்தில் பாஜக அரசு ஜனநாயக பாதையை விட்டு விலகி செல்கிறது. ஜனநாயகத்தை நம்பாமல் சர்வாதிகாரத்தின் மேல் நம்பிக்கை கொண்ட கட்சி பாஜக. பொதுத்துறை நிறுவனமான ரயில்வே, எல்ஐசியை அடி மாட்டு விலைக்கு விற்கும் முயற்சி நடை பெற்று வருகிறது என குற்றஞ்சாட்டினார்.
மேலும், மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து இடதுசாரிகள் சார்பாக வருகின்ற 12ஆம் தேதி முதல் 18ஆம் தேதிவரை அனைத்து மாநிலங்களிலும் பல கட்ட போராட்டம் நடைபெற உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து பேசிய அவர், டிஎன்பிஎஸ்சி அரசுத் தேர்வு முறை கேட்டில் பிடிபட்ட அனைவரும் சுண்டெலிகள். பல பெருச்சாளிகள் இதுவரை பிடிபடவில்லை. அப்படி பிடிபடாதவர்கள் அமைச்சர்களாகக்கூட இருக்கலாம். இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய பட்ஜெட்டை கண்டித்து இடது சாரிகள் சார்பாக நாடுதழுவிய போராட்டம் மேலும், தாக்கல் செய்யப்பட உள்ள தமிழ்நாடு பட்ஜெட்டில் விவசாயிகள் காப்பாற்றப்பட வேண்டும். நீட் விவரத்தில் தமிழ்நாடு அரசு இரட்டை வேடம் போடுவதை விட்டுவிட்டு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க:குரூப் 2A தேர்வு முறைகேடு: இருவரிடம் சிபிசிஐடி விசாரணை