தேசிய வாக்காளர் தினம் ஜனவரி 25ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தவறாமல் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது.
இதன் ஒரு பகுதியாக ஸ்ரீவில்லிபுத்தூரில் வருவாய்த் துறை அலுவலகத்திலுள்ள தேர்தல் பிரிவு சார்பில் பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் என சுமார் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை வட்டாட்சியர் கிருஷ்ணவேணி தொடங்கிவைத்தார்.