தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அருப்புக்கோட்டையில் ரோபாட்டிக் போட்டி: மாணவர்கள் ஆர்வம்!

விருதுநகர்: அருப்புக்கோட்டையில் நடந்த ரோபாட்டிக் போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் தாங்கள் வடிவமைத்த ரோபோக்களுடன் பங்குபெற்றனர்.

robotic competition aruppukkottai

By

Published : Nov 3, 2019, 4:39 PM IST

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய அளவிலான ரோபாட்டிக் போட்டியின் மாநில அளவிற்கான தகுதித்தேர்வு நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு கேரளா, டெல்லி ஆகிய மாநிலங்களிலிருந்து பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். திருச்சியைச் சேர்ந்த புரப்பெல்லர் டெக்னாலஜி எனும் ரோபாட்டிக் நிறுவனம் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியது.

ஜுனியர், மிடில், சீனியர் என்று மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில் 50 அணிகள் தாங்கள் வடிவமைத்த பிரத்யேக ரோபாட்களுடன் கலந்து கொண்டனர்.

அருப்புக்கோட்டையில் நடைபெற்ற ரோபாட்டிக் போட்டி

மேலும், டிரோன்கள், ஸ்பைடர், ஸ்மார்ட் டிராலி என 40க்கும் மேற்பட்ட ரோபோக்கள் இப்போட்டியில் இடம்பெற்றிருந்தன. மாநில அளவிலான தகுதிச்சுற்றில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவர்கள் வருகின்ற டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டிக்குத் தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அனுமதி பெறாமல் தேவர் சிலை வைக்க முயற்சி...மதுரையில் பரபரப்பு

ABOUT THE AUTHOR

...view details