தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து - தேசிய பசுமை தீா்ப்பாயம் அமைத்த குழு ஆய்வு! - Chennai High Court Retired Judge Kannan

விருதுநகர்: சாத்தூர் அருகே கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது. இவ்விபத்து ஏற்பட்ட ஆலையை தேசிய பசுமை தீா்ப்பாயம் அமைத்த, சென்னை உயர்நீதிமன்ற ஒய்வு பெற்ற நீதிபதி கண்ணன் தலைமையிலான எட்டு போ் கொண்ட குழுவினா் நேரில் ஆய்வு செய்தனா்.

Chennai High Court Retired Judge Kannan
சென்னை உயர்நீதிமன்ற ஒய்வு பெற்ற நீதிபதி கண்ணன்

By

Published : Feb 27, 2021, 1:01 AM IST

Updated : Feb 27, 2021, 5:06 AM IST

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளம் மாரியம்மாள் பட்டாசு ஆலையில் கடந்த 12ம் தேதி பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் தற்போது வரை 23 போ் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த வெடி விபத்தில் காயம் அடைந்த 15க்கு மேற்பட்டவா்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த பட்டாசு ஆலை வெடிவிபத்து குறி்த்து, ஆலை உரிமையாளா் உள்பட ஐந்து பேரை ஏழாயிரம்பண்ணை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த நிலையில் அச்சங்குளம் பட்டாசு ஆலை வெடிவிபத்து தொடர்பாக டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீ்ர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை எடுத்து கொண்ட நிலையில், இந்த பட்டாசு வெடிவிபத்து சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சென்னை உயா்நீதிமன்ற ஒய்வு பெற்ற நீதிபதி கே.கண்ணன் தலைமையில் எட்டு போ் கொண்ட குழு அமைக்கபட்டது.

இந்த குழுவில், சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சத்தைச் (MoEF&CC) சேர்ந்த கருப்பையா, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தைச் (CPCB) சேர்ந்த வரலட்சுமி, பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு (PESO)மற்றும் வெடிபொருட்களின் கட்டுப்பாட்டாளர், நாக்பூர் சேர்ந்த குல்கா்ணி, தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை சேர்ந்த எம்.வி.செந்தில்குமார், வேதியியல் பொறியியல் துறை, ஐ.ஐ.டி. சேர்ந்த ராஜகோபாலன் சீனிவாசன், மாநில பேரிடர் மேலாண்மை அதிகார உறுப்பினர் மங்கள ராம சுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய குழுவினா் நேற்று (பிப்.26) அச்சங்குளத்தில் வெடி விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையை நேரில் சென்று ஆய்வு செய்தனா்.

மேலும் இந்த பட்டாசு ஆலை வெடிவிபத்து ஏற்பட காரணம் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தனா். அதுசமயம் இந்த பட்டாசு ஆலைகளில் விதிமீறல் ஏதும் நடந்துள்ளதா? எனவும், பட்டாசு ஆலைகளில் இனிமேல் பட்டாசு விபத்து நடக்காமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து கேட்டு அறிந்தனா்.

இவ்விபத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முழுமையாக ஆய்வு மேற்கொண்டு ஒரு மாதத்தில் தேசிய பசுமை தீா்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. அதே போல் பட்டாசு ஆலைகளில் கையாள வேண்டிய வழிமுறைகள் குறித்தும் இந்த குழு ஆய்வு செய்து வருகின்றனா். இந்த ஆய்வின் போது வருவாய் மற்றும் தீயணைப்பு துறை சார்ந்த அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

இதையும் படிங்க: சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து ஓய்வு நீதிபதி தலைமையிலான குழு ஆய்வு!

Last Updated : Feb 27, 2021, 5:06 AM IST

ABOUT THE AUTHOR

...view details